பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, வெங்காயம் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சியை, நாளை நடத்துகின்றன. அதில், சிறு, பெரு வெங்காய தாள் நீக்கும் இயந்திர செயல்பாடு குறித்து, நேரடி செயல் விளக்கம் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர், 9787713448 என்ற எண்ணில் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளரை, 0427 - 2422550 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.