விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னிவேன்: ஒருவர் பலி | சேலம் செய்திகள் | Dinamalar
விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னிவேன்: ஒருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
11:39

தலைவாசல்: தலைவாசல் அருகே நடந்த சாலை விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். தலைவாசல், தேவியாக்குறிச்சி ஊராட்சி, தெற்கு தெருவை சேர்ந்தவர் பாரதி, 20. சலூன் கடை நடத்தி வந்தார். இவர் சொந்த வேலை காரணமாக, ஆம்னி வேனில் நேற்று ஆத்தூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரவு, 10:00 மணியளவில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாமியார் கிணறு அருகில் சென்ற போது, ஈச்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. படுகாயமடைந்த பாரதியை பகுதிவாசிகள் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். ஆத்தூர் தீயணைப்பு துறையினர், ஆம்னி வேனில் எரிந்த தீயை அணைத்தனர். தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஈச்சர் லாரியை, தீவட்டிப்பட்டியை சேர்ந்த இளையராஜா, 29, என்பவர் ஓட்டியது தெரியவந்தது. காயமடைந்த அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X