கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து பெண்ணிடம் ரூ.80 ஆயிரம் மோசடி | சேலம் செய்திகள் | Dinamalar
கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து பெண்ணிடம் ரூ.80 ஆயிரம் மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
11:39

சேலம்: சங்ககிரியை சேர்ந்த இளம் பெண்ணின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து, 80 ஆயிரத்து, 276 ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சேலம் மாவட்டம், சங்ககிரி மதலைக்காட்டை சேர்ந்த செந்தில் ராஜா மனைவி பிரியதர்ஷினி, 27. இவர், எம்.எஸ்சி., பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். கடந்த, 23 மாலை, 4:15 மணிக்கு எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, தான் பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை ரத்து செய்ய கோரி உள்ளார். 25 மதியம், 1:00 மணிக்கு கிரெடிட் கார்டை ரத்து செய்ய, தகவல் கேட்டு மர்ம நபர் போனில் பேசியதோடு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளார். அவர் கேட்ட விபரங்களை இவர் தெரிவிக்கவே, அடுத்த சில நிமிடங்களில், அவரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து, இரண்டு தவணைகளாக, 80 ஆயிரத்து, 276 ரூபாய் அபேஸ் செய்யப்பட்டு விட்டது. இது குறித்து பிரியதர்ஷினி, சேலம் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X