ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை, 850 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 740 கன அடியாக இருந்த நீர்வரத்து,நேற்று காலை, 850 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 740 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. வலது, இடது வாய்க்காலில் சுழற்சி முறையில் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் நிலையில், நேற்று தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. ஆற்றில், 700 கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால், ஆங்காங்கு மிக குறைவான அளவில் ரசாயன நுரை தேங்கி நின்றது.