குடும்ப பிரச்னையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
குடும்ப பிரச்னையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
16:16

ஓசூர்: அஞ்செட்டி அருகே, குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மேட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேஷ், 27; ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா, 23; இவர்களது இரண்டு பெண் குழந்தைகள், வர்னிதா, 3, மற்றும் ஏழு மாத பெண் குழந்தை தனுஷிரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மொபைல்போனில் அதிகநேரம் பேசுவதை கணவர் கண்டித்ததால், தீபா தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டார். நேற்று முன்தினம் காலை தன்னை, உரிகத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்று விடுமாறு, கணவரிடம் கேட்டுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை அழைத்து செல்வதாக வெங்கடேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் அன்றிரவு, மூத்த மகள் வர்னிதாவை தூங்க வைத்து விட்டு, குழந்தை தனுஷிரியை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற தீபா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் வெங்கடேஷின் பெற்றோர் புகாரின்படி, அஞ்செட்டி போலீசார் தேடியபோது, அருகில் உள்ள கிணற்றில் குழந்தை தனுஷிரியுடன், தீபா சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் தீபா குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., கிருத்திகா வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணமான ஐந்து ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்ததால், ஓசூர் சப்-கலெக்டர் விசாரிக்கிறார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X