அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி: பழனிசாமி உதவியாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
16:19

சேலம்: அரசு போக்குவரத்துக்கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர், புரோக்கராக செயல்பட்டவர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்த குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன்,29; இன்ஜினியரான இவர், கடந்த, 2019ல் போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் பணியில் இணைய விண்ணப்பித்து இருந்தார். தன் நண்பர் மூலம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பட்டி கொப்பத்தார் தோட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் மகன் செல்வகுமார்,35, என்பர் தொடர்பு கொண்டார். அவர், முதல்வர் பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றும் தீவட்டிப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த மாரப்பன் மகன் மணி, தனக்கு நன்கு அறிமுகம், அவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக தமிழ்ச்செல்வனிடம் உறுதி அளித்து, ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதை நம்பி, 2019 ஜனவரி துவங்கி நடப்பாண்டு மார்ச் வரை, வங்கி பரிவர்த்தனை மூலம் செல்வகுமாருக்கு, 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கித் தர வில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பணத்தை தமிழ்ச்செல்வன் திருப்பி தரும் படி கேட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம், நான்கு லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்த நிலையில், 13 லட்சம் ரூபாய் திருப்பி தர மறுத்ததோடு, மிரட்டலும் விடுத்துள்ளார்.


இது குறித்து தமிழ்ச்செல்வன், கடந்த செப்.,26ல் சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்விடம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட மத்திய குற்றப்பிரிவு டி.எஸ்.பி., இளமுருகனுக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை நடத்திய அவர் நேற்று முன்தினம் இரவு, மணி, செல்வகுமார் மீது மோசடியில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் மணி, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் வீட்டுக்கு சென்று விட்டார். அதனால், நேற்று மாலை வரை அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடியாமல் தவித்து போயினர்.


வழக்குகளால் பணத்தை திரும்ப வழங்கும் அ.தி.மு.க.,வினர்: அரசு வேலை வாங்கித் தருவதாக செல்வகுமார் மூலம் பணம் அளித்தவர்கள், பழனிசாமியின் உதவியாளர் மணி மீது அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த காலங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அ.தி.மு.க.,வினர் மீது, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்க துவங்கி உள்ளனர். இது குறித்து புகார்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் குவிய துவங்கி உள்ளதையடுத்து, அ.தி.மு.க.,வினர், புரோக்கர்கள் பெற்ற பணத்தை திரும்ப கொடுக்க துவங்கியுள்ளதாகவும், அவர்களை தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


அப்ரூவராகும் புரோக்கர்: பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவி வகித்தது முதல், முதல்வர் பதவியில் இருந்த வரையிலான, 10 ஆண்டுகள் மணி அவருக்கு உதவியாளராக (அரசியல்) பணியாற்றி வந்தார். அவரின் பழக்கத்தை தனக்கு சாதமாக்கி கொண்ட செல்வகுமார், தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பெற்றோர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வசூல் வேட்டை நடத்தி உள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பணம் கொடுத்தவர்கள், செல்வகுமாருக்கு நெருக்கடி கொடுக்கவே, அவர் மணியிடம் பணம் கொடுத்ததாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், கடந்த, ஆக.,20ல் செல்வகுமார், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்விடம், புகார் அளித்தார். அதில், 14 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 1.37 கோடி பெற்ற மணி, தொடர் நெருக்கடியால், 60 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்து விட்டார். 77 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மணி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கி உள்ள நிலையில், செல்வகுமார் அப்ரூவராக மாற போலீசில் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X