பள்ளி மாணவி, இளம்பெண் மாயம் | கரூர் செய்திகள் | Dinamalar
பள்ளி மாணவி, இளம்பெண் மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
17:19

கரூர்: வாங்கல் அருகே பள்ளி மாணவியும், க.பரமத்தி அருகே இளம்பெண்ணும் மாயமாகியுள்ளனர். கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த, 15 வயது மாணவி மண்மங்கலத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு, வெளியே சென்ற மாணவியை காணவில்லை. இது குறித்து, மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

* க.பரமத்தி அருகே மருதப்பட்டியை சேர்ந்த, 21 வயது இளம் பெண், கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 24ல் வீட்டில் இருந்து வேலைக்கு வந்த இளம்பெண்ணை காணவில்லை. இதுகுறித்து, பெண்ணின் தாய் போலீசில் புகார் செய்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X