தீபாவளி பலகாரம்; தரமில்லையெனில் 'வாட்ஸ் ஆப்' புகார் செய்யலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
19:08



பொள்ளாச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பலகாரம் தயாரித்து விற்பவர்கள், உணவுப்பாதுகாப்பு துறையின் விதிகளை கடைப்பிடித்து, தரமான தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவாளி பண்டிகையில், பட்டாசு, புத்தாடைக்கு அடுத்தபடியாக, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை, பண்டிகைக்கான பலகாரங்களை மக்கள் வீட்டிலேயே தரமான முறையில் தயாரித்து, உறவினர், அண்டை வீட்டாருக்கும் பகிர்ந்து, பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

கால மாற்றத்தில், மக்கள், கடைகளில் இனிப்பு, காரங்களை வாங்கி வருவது வழக்கமாகி விட்டது. இதை பயன்படுத்தி, பண்டிகை 'ஸ்பெஷல்' பலகாரங்கள் தயாரித்து விற்கும் கடைகளும் அதிகரித்து விட்டன.ஆனால், சில கடைகளில் தரமற்ற முறையில் பலகாரங்கள் தயாரிப்பதால், அவற்றை உண்பவர்கள் உடல் நலக்கேடுக்கு ஆளாகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பலகார தயாரிப்பாளர்களுக்கு உணவுப்பாதுகாப்பு துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:

கடைகளில் விற்கப்படும் பண்டிகை பலகாரங்களின் தரம் குறித்து, உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு நடத்தும். தரத்தில் குறை இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருட்கள் தயாரிப்பில், தரத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு கையாளுதல், பரிமாறுதல் பணிகளை மேற்கொள்பவர்கள் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கிகள் அணிய வேண்டும்.தயாரிக்கும் இடங்கள் சுத்தமாகவும், ஈக்கள் இன்றியும் இருக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை செய்தித்தாள்கள் கொண்டு மூடி வைத்தாலோ, பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டாலோ, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.அங்கீகரிக்கப்பட்ட பிராண்ட் எண்ணெய்களை மட்டுமே பலகாரம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை உபயோகிக்கக் கூடாது. சில்லரை முறையில் விற்பனை செய்ய தயாரிக்கப்படும் இனிப்பு, காரங்களில், காலாவதி தேதி, பயன்படுத்தும் தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.வீட்டில் இனிப்பு தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தற்காலிக அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிகளை மீறுவோர் குறித்தும், தரமற்ற உணவுப் பொருள் தயாரிப்போர் குறித்தும், பொதுமக்கள் உணவுப்பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.இவ்வாறு, உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X