ஒரு போன் போதுமே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
19:10

பள்ளி அருகே குப்பைநெகமத்தில், தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே, குப்பை குவிக்கப்படுவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.எஸ். மாணிக்கம், நெகமம்.அண்ணா திடல் அழகாகுமா?வால்பாறை நகரில் உள்ள, அண்ணா திடல் கார் பார்க்கிங் இடமாக மாறுகிறது. இதனால், வாகன நெருக்கடியும் ஏற்படுகிறது. அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து, நகராட்சி சார்பில் அழகுபடுத்த வேண்டும்.க. ஷியாம், வால்பாறை.'குடி'மகன்கள் அத்துமீறல்பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் ரோட்டில், உழவர் சந்தையின் பின்பக்க நுழைவுவாயில் அடைக்கப்பட்டுள்ளது. அங்கு, திறந்தவெளியில் மது குடிப்பதை தவிர்க்க, முள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வரிசையாக நின்று மது குடிப்பது அதிகரித்துள்ளது.எம். உமாமகேஸ்வரி, பொள்ளாச்சி.அரசு கட்டடத்தில் அச்சம்பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள, உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் கட்டடத்தின் மேல் பகுதியில், மழை நீர் தேங்கி நிற்கிறது; செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டடத்தினுள் நீர்கசிவு ஏற்பட்டு, உறுதிதன்மை இழந்து வருகிறது.எல்.அருமைக்கண், பொள்ளாச்சி.அரசு அதிகாரிகளே கவனிங்க!பொள்ளாச்சி, கடை வீதி மற்றும் அருகில் உள்ள வீதிகளில், கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைக்க, குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர். அரசு துறையினர் இதை கவனிக்க வேண்டும்.எம்.ராஜேஸ்வரி, பொள்ளாச்சி.நிழற்கூரை வேண்டும்மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. இதனால் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அங்கு நிழற்கூரை அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கு.மலையப்பன், கொமரலிங்கம்.சொந்த கட்டடம் தேவைமடத்துக்குளம் அருகே உள்ள கே.டி.எல்., ரேஷன் கடை, வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. அங்கு போதிய இடவசதியும் இல்லை. எனவே, ரேஷன்கடைக்கு சொந்த கட்டடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.க. முருகவேல், கே.டி.எல்., மடத்துக்குளம்.ஒளிராத கோபுர விளக்குஉடுமலை - பழநி ரோடு, வெஞ்சமடை உயர் மின்கோபுர மின் விளக்கு எரிவதில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி விடுகிறது. இவ்விளக்கு ஒளிர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.கண்ணன், உடுமலை.பயணிகள் முகம் சுளிப்புகுறிச்சிக்கோட்டை பஸ் ஸ்டாப் பராமரிப்பில்லாமல், குப்பை, கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. அங்கு பயணிகள் நிற்க முகம் சுளிக்கின்றனர். எனவே பஸ் ஸ்டாப்பை துாய்மைப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.க. ராஜாராம், உடுமலை.ஆக்கிரமிப்புகள் அதிகரிப்புஉடுமலை வெங்கடகிருஷ்ணா ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம். கேசவன், உடுமலை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X