வன விலங்கு மறுவாழ்வு மையம் வனத்துறை அமைச்சர் உறுதி | நீலகிரி செய்திகள் | Dinamalar
வன விலங்கு மறுவாழ்வு மையம் வனத்துறை அமைச்சர் உறுதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
20:38

ஊட்டி: ''வன விலங்குகளுக்கான மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை முதுமலையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், முதுமலையில் ஆட்கொல்லி புலியை கடும் போராட்டத்துக்கு பின், கடந்த, 16ம் தேதி, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்த புலி மைசூரு வன விலங்கு மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற மையம், முதுமலையில் இருந்தால், வரும் நாட்களில், விலங்கு சிகிச்சைக்கு பயனுள்ளதாக அமையும் என்பது, வன உயிரின ஆர்வலர்களின் கருத்து.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''டி-23 புலி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. இதை வண்டலுார் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காயங்களுடன் பிடிபடும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கவும, பராமரிக்கவும் முதுமலையில் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X