மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு வேலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:00



கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வேலைவாய்ப்பு மையம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 52 பேர், தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கட்டடம் தரைதளத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு மையம் செயல்படுகிறது.மாவட்ட நிர்வாகமும், 'வீ ஆர் யுவர் வாய்ஸ்' என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து, இந்த மையத்தை செயல்படுத்துகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மையம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருகின்றனர்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர். சுயதொழில் செய்வதற்கு வங்கி கடன் வசதிகளும் செய்து தருகின்றனர்.இம்மையத்தில் வேலைவாய்ப்பு கோரியும், சுய தொழில் செய்வதற்கு கடன் வசதி செய்து தரக்கோரியும், இதுவரை 137 பேர் பதிவு செய்துள்ளனர்.இவர்களில் 52 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் பிளிப்கார்ட், அமேசான், பிக்பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளன.வேலைவாய்ப்பு மைய அதிகாரிகள் மார்ட்டின், சரவணகுமார் கூறியதாவது:

தொழில், வர்த்தக நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை கண்டறிந்து, சேருவதற்கு ஏற்பாடு செய்கிறோம். இம்மையத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களில் பேக்கிங் அசிஸ்டென்ட் வேலைக்கு, 13 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு மட்டுமின்றி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு பிளீச்சிங் பவுடர், பினாயில், மெழுகுதிரி தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தற்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்கள் தயார் செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும், நாங்கள் ஏற்படுத்தி தருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X