கலர் கலரா பலகாரம்... காத்திருக்கு அபராதம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:07

கோவை: 'பலகாரம் தயார் செய்வோர், தரத்தில் எந்த சமரசமும் கூடாது. தரமற்ற பலகாரம் கண்டறியப்பட்டால், அதை தயார் செய்தவருக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என்று உணவுப்பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால், பலகாரக் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. திடீர் பலகாரக் கடைகளும் ஆங்காங்கே செயல்பட தொடங்கியுள்ளன.

பலகாரக் கடைகள், சிறிய அளவில் செயல்பட்டாலும் சரி, பெரிய அளவில் செயல்பட்டாலும் சரி, தரத்தில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

ஓட்டல்கள் அல்லது பண்டிகை கால திடீர் பலகாரக் கடைகள் என யாராக இருந்தாலும், பலகாரம் தயார் செய்யும் இடம் சுத்தம், சுகாதாரமானதாக இருக்க வேண்டும். தரத்தில் எந்த சமரசமும் கூடாது.பயன்படுத்தக்கூடிய எண்ணெய், பேக்கேஜ்டு நிலையில் வாங்கப்பட வேண்டும்.

டின்னில் வாங்கினாலும் லேபிளிங் உடன் இருக்க வேண்டும். பேக்கேஜ் தேதி, பேட்ச் எண், காலாவதி தேதியுடன் இருக்க வேண்டும். பயன்படுத்தும் எண்ணெய்க்கு பில், வவுச்சர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.பலகாரம் தரமானதாக தயார் செய்யப்பட வேண்டும். தயார் செய்யப்பட்ட பலகாரத்தை, பழைய செய்தித்தாளில் குவித்து வைப்பது, அதைக் கொண்டு மூடி வைப்பது தவறு. அதை உணவு பாதுகாப்புத்துறை தடை செய்துள்ளது. கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தினாலும், கடும் நடவடிக்கை இருக்கும்.பலகாரங்களில் நிறம் சேர்க்காமல் தயார் செய்வதே சிறப்பானது. எனினும் குறைந்த அளவு நிறமிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அனுமதியற்ற நிறமிகளை பயன்படுத்கக்கூடாது. அளவுக்கு அதிகமாகவும் நிறமிகளை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் பலகாரம் வாங்கும்போது, நிறம் எடுப்பாக இருப்பதாக தெரிந்தால் புகார் தெரிவிக்கலாம்.பலகாரத்தை விற்பனை செய்யும்போது லேபிள் உடன் பேக் செய்து தர வேண்டும். லேபிள் இல்லை என்று புகாரே வரக்கூடாது.

அப்படி புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பலகார தயாரிப்பாளருக்கு, மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும். பலகாரம் தரமற்றதாக இருந்தால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.துறை ஆய்வில் பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று கண்டறியப்பட்டால், அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். இது மட்டுமின்றி கிரிமினல் வழக்கும் தொடரப்படும்.இது தொடர்பான புகார்களை, உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 94440 42322 மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு, டாக்டர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X