மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவமனை திட்டம் ரத்து 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:10

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் 500 படுக்கைகளுடன், மருத்துவமனை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவக்கல்லுாரி, அவினாசி ரோட்டில் உள்ள சிட்ரா பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள், செயல்முறை வகுப்புகளுக்கு, தினமும் ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

போக்குவரத்து நெரிசல், நெடுந்துார பயணம் உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ மாணவர்களின் வசதிக்காக, கல்லுாரியிலேயே 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கென, 2019ம் ஆண்டு, மருத்துவமனை சார்பில் சுகாதார துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட சுகாதார துறையினர், ரூ.120 கோடியில், மருத்துவமனை கட்டுவதற்கு திட்டமிட்டனர். அதன்பிறகு, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டதால், தற்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''அரசு மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சுலபம். இந்நிலையில், புதிதாக ஒரு மருத்துவமனை கட்டி, அதில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது கடினம். மாணவர்களின் கல்விக்காக, நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றிக் கொண்டே இருக்கவும் முடியாது. மாணவர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக, பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,''என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X