கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீரை அளந்து கொடுக்க திட்டம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:16

உடுமலை: கூட்டுக்குடிநீர் திட்டங்களில், முறைகேடுகளை தடுக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரை அளவீடு செய்து வழங்க, எல்லைகளில் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு நான்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக, தளி, சங்கராமநல்லுார், மடத்துக்குளம், கொமரலிங்கம், கணியூர் பேரூராட்சிகள் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 409 ஊரக குடியிருப்புகளிலுள்ள, 2.50 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், நாளொன்றுக்கு, 3.10 எம்.எல்.டி., நீரும், கணக்கம்பாளையம் திட்டத்தில், 7.4 எம்.எல்.டி., மடத்துக்குளம் திட்டத்தில், 11.76 எம்.எல்.டி., குடிநீர் மற்றும் குடிமங்கலம் திட்டத்தில், 9.03 எம்.எல்.டி., என, நான்கு திட்டங்களிலிருந்து, நாளொன்றுக்கு, 31.29 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாடுகுடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, போதியளவு குடிநீர் வழங்கினாலும், முறைகேடாக வழங்கப்பட்ட வீட்டு இணைப்புகள், வழியோரத்தில் திருட்டு, முதலில் உள்ள ஊராட்சிகள் அதிகளவு நீரை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட காரணங்களினால், மக்களுக்கு உரிய அளவு குடிநீர் கிடைப்பதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில், 'குடிநீர் வடிகால் வாரியம் திட்டத்தின் அடிப்படையில் உரிய அளவு வழங்குவதில்லை; பற்றாக்குறை குடிநீர் வழங்குவதால், பிரச்னை ஏற்படுகிறது,' என்கின்றனர். கூடுதலாக வினியோகம்குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது :எதிர்கால மக்கள் தொகையை அடிப்படையாகக்கொண்டு, நான்கு திட்டங்களும் வடிவமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.திருமூர்த்தி அணை நீர் இருப்பு காரணமாக, திட்டங்கள் இயக்கத்தில் சிக்கல் இல்லை. ஆனால், குடிநீர் போதிய அளவு வரவில்லை என சில உள்ளாட்சிகளில், புகார் தெரிவிக்கின்றனர். எடுக்கும் குடிநீர் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.கிராமங்களில், முறைகேடு இணைப்புகள் மற்றும் திருட்டு காரணமாகவே, சிக்கல் ஏற்படுகிறது. 20 ஆண்டு வரை மக்கள் தொகை உயர்வை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களில், அதே அளவிற்கு, நீர் எடுத்து தற்போதுள்ள மக்களுக்கும் கூடுதலாகவே குடிநீர் வழங்கப்படுகிறது.

பிரச்னைக்கு தீர்வாக, தற்போது, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுடன் இணைந்து, மீட்டர் பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளிலும், குடிநீர் திட்ட பிரதான குழாய்களிலிருந்து பிரியும் பகுதியில், மீட்டர் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்ட குடிநீர், வாரியம் வாயிலாக, முழுமையாக வழங்கப்படும்.

இதனை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக ஆவணப்படுத்தி, அதற்குரிய தொகை செலுத்தினால் போதும்; இரு துறை அதிகாரிகளும் கண்காணிப்பு செய்வார்கள். ஒதுக்கீட்டை விட குறைவாக குடிநீர் சென்றால் உடனடியாக சரி செய்யப்படும். மடத்துக்குளம், குடிமங்கலம், உடுமலை ஒன்றிய பகுதிகளில், திடீர் ஆய்வு செய்ததில், உள்ளாட்சி அமைப்புகளே, பல இடங்களில் முறைகேடாக குழாய் அமைத்தது; துவக்க பகுதியிலுள்ள உள்ளாட்சிகள் அதிகளவு குடிநீர் எடுத்தது தெரிந்து, சரி செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், குடிநீர் அளவு மானி பொருத்தும் பணி துவங்கியுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X