தீபாவளி பண்டிகையை முன்னிட்டு: 40 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:21

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தீபாவளி பண்டிகைக்கு, 10 நாட்களுக்கு, 40 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்பட்டுள்ளது.

தமிழகத்தில், தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடும் நிலையில், பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். நெரிசலை சமாளிக்க, அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கும்.இந்தாண்டு, வரும், 4ம் தேதி தீபாவளி வரும் நிலையில், வெளியூர்களுக்கு தொடர்ந்து, 10 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

நாளை மறுநாள் (30ம் தேதி) முதல், வரும், 8ம் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயங்கும்.பொள்ளாச்சியில் இருந்து, கோவை, சேலம், திருச்சி, தேனி, மதுரை வழித்தடங்களில், 30 பஸ்கள்; பழநி வழித்தடத்தில் ஐந்து பஸ்கள்; வால்பாறைக்கு ஐந்து பஸ்கள், என, மொத்தம், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

வால்பாறைக்கு வழக்கமாக தினமும், 36 'டிரிப்'கள் பஸ் இயக்கப்படுகிறது. இது, 47 'டிரிப்'களாக உயர்த்தப்படும். பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப, தேவையான வழித்தடங்களில் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என, போக்கவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X