வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் தவிப்பு  | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் தவிப்பு 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:23

வால்பாறை: வால்பாறை, அரசு மேல்நிலைப்பள்ளி கேட்டின் முன், நிறுத்தப்படும் வாகனங்களால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

வால்பாறை நகரில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அருகில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப்பள்ளியில், 989 மாணவர்கள் படிக்கின்றனர். வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்து, மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிக்கின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் மெயின் கேட் முன்பாக, ஆம்னி வேன்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. பள்ளி நுழைவுவாயிலை மறைத்து வேன்கள் நிறுத்தப்படுவதால், பள்ளிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவருகிறது.

ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளியின் முன்பாக, வாகனங்களை நிறுத்தக்கூடாது என, பல முறை கூறினாலும், அவர்கள் மீண்டும், பள்ளி கேட் முன்பாக வாகனங்களை நிறுத்துகின்றனர்.வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் நேரடியாக வந்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X