முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு ராணுவ பயிற்சி கல்லுாரியில் கவுரவம் | நீலகிரி செய்திகள் | Dinamalar
முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு ராணுவ பயிற்சி கல்லுாரியில் கவுரவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:34

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் கொரோனா நேரத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்பட்டனர்.

கொரோனா கால கட்டத்தில், பணியாற்றிய முன்கள மகளிர் பணியாளர்களுக்கு, குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரி சார்பில், காலாட்படை தினத்தில் பாராட்டு விழா நடந்தது.

இதில், 'மருத்துவ வசதிகளை மேம்படுத்தியதற்காக, ராணுவ மருத்துவமனை மூத்த பதிவாளர் கர்னல் ரீட்டா பொற்கொடி; திட்டங்களை விரைவாக செயல்படுத்திய கன்டோன்மென்ட் முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பலிச்சா; ராணுவ மருத்துவமனை ஊழியர்கள்; துப்புரவு பணியாளர்கள்; காவலர்கள்,' உட்பட முன்கள பணியாளர்கள், 12 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு, சான்றிதழ்கள், பரிசுகளை கமாண்டன்ட் லெப்.ஜெனரல் கலோன் வழங்கி கவுரவித்தார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X