பருவ மழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு குழு தயார் | நீலகிரி செய்திகள் | Dinamalar
பருவ மழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு குழு தயார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
21:36

குன்னுார்: வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குன்னுாரில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. அதில், தீயணைப்பு துறை, போலீசார், வருவாய்துறையினர் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில், தீயணைப்பு வீரர்களின் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.பேரிடரின் மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில், மின் தடை ஏற்பட்டால், 100 மீட்டர் துாரம் வரை ஒளி தெரியும் வகையில், ஜெனரேட்டரில் பயன்படுத்தும் 'அஷ்கா லைட்' தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தளவாட பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X