தொண்டாமுத்தூர்: மாதம்பட்டியில், தீ விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடுவது குறித்து, தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள் சார்பில், மாதம்பட்டி, தென்கரை உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், தீபாவளி பண்டிகையை, தீ விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது, சிறிய தீ விபத்துகள் ஏற்பட்டால், எப்படி கையாளுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள், விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ்களை, பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.