கோவை: ஈரோடு, கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் பவித்ர குமார், 24. இவர் அந்தியூர்-கோவை இடையே இயக்கப்படும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பஸ் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தது.அப்போது பஸ்சில் உள்ள பெட்டியில், கண்டக்டர் தனது கைப்பையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றார்.
அப்போது பஸ்சில் ஏறிய மர்ம நபர், 12,500 ரூபாயுடன் இருந்த கண்டக்டரின் கைப்பையை திருடி சென்றார்.மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, தனது கைப்பை மாயமானது தெரிந்து அதிர்ச்சியடைந்த கண்டக்டர், காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.