பொள்ளாச்சி: பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், தன் சொந்த ஊரில், கொரோனா தொற்றால் தொடர் மரணங்கள் ஏற்பட்டதால், மொத்த கிராமத்துக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு, கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, வடக்கு ஒன்றியம் திப்பம்பட்டி கிராமம் எனது சொந்த ஊராகும். அங்கு வசித்த லட்சுமி என்பர், கடந்த, 8ம் தேதி கொரோனா பாதிப்பால் இறந்தார்.இறுதிச் சடங்கில் பங்கேற்ற உள்ளூரை சேர்ந்த உறவினர்கள் திருமூர்த்தி மற்றும் ராணி ஆகியோர் கொரோனா பாதிப்பால், கடந்த, 26ம் தேதி இறந்தனர். இதனால், ஊரில் மக்களிடையே தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே, திப்பம்பட்டியில் வசிக்கும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடத்தி, தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.