கூடுதல் 'எம்சாண்ட்' பாரம் ரூ.34 ஆயிரம் அபராதம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கூடுதல் 'எம்சாண்ட்' பாரம் ரூ.34 ஆயிரம் அபராதம்
Added : அக் 27, 2021 | |
Advertisement
 

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில், கூடுதலாக 'எம்சாண்ட்' பாரம் ஏற்றிய லாரிக்கு, 34 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கிணத்துக்கடவு போலீசார் நேற்று, செக்போஸ்ட் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசம்பாளையம் வழித்தடத்தில் இருந்து, கிணத்துக்கடவு நோக்கி வந்த 'எம்சாண்ட்' பாரம் ஏற்றிய லாரி சோதனையிடப்பட்டது.அதில், கூடுதல் பாரம் ஏற்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, லாரிக்கு, 34 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, அனுமதி இன்றியும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவும், கனிமவளம் ஏற்றிய லாரிகள் இயக்கப்படுகின்றன.அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கப்படும் இந்த 'டிப்பர்' லாரிகளை மக்கள் சிறைபிடித்து, போலீசில் ஒப்படைப்பதால், போலீசாரே களமிறங்கி, அபராதம் விதிக்க துவங்கியுள்ளனர்.போலீசார் மட்டுமின்றி, வருவாய்த்துறை அதிகாரிகளும், தினமும் வாகனச்சோதனை மேற்கொள்ள வேண்டும். கனிமவளம் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X