உடுமலை: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில், இன்று, 19 முகாம்களில், தடுப்பூசி செலுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், 200 பேருக்கும், ஒன்றியத்தில், எரிசனம்பட்டி, அமராவதி, செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தலா, 200 பேருக்கு என, 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில், குடிமங்கலம், பெதப்பம்பட்டி, ராமச்சந்திராபுரம், பூளவாடி ஆரம்ப பள்ளிகளில், தலா, 610 பேர், என, 2,440 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.மடத்துக்குளம் ஒன்றியம், வஞ்சிபுரம் துவக்கப்பள்ளியில், 250 பேருக்கும், காரத்தொழுவு மினி கிளினிக், 100, கணியூர் பேரூராட்சி அலுவலகம், 250, கடத்துார் துவக்கப்பள்ளி, 250 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 200 பேருக்கும், கொமரலிங்கம் துவக்கப்பள்ளியில், 1000 பேருக்கும், கொமரலிங்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 900 பேருக்கும், பாப்பான்குளம் பள்ளியில், 700, பாப்பான்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 520 பேருக்கும், துங்காவி பள்ளியில், 800 பேருக்கும், துங்காவி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 680 பேருக்கும் என, 5,650 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.