வெலிங்டனில் காலாட்படை தினம் மலரஞ்சலி செலுத்தி மரியாதை | நீலகிரி செய்திகள் | Dinamalar
வெலிங்டனில் காலாட்படை தினம் மலரஞ்சலி செலுத்தி மரியாதை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
22:16

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், 75வது காலாட்படை தினத்தையொட்டி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு ஊடுருவலை தடுக்க, 1947ம் ஆண்டு அக்., 27ல் காலாட்படை சென்றது. அன்றைய தினம், காலாட்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில், போர் நினைவு தூணில், நேற்று நடந்த, 75வது காலாட்படை தினத்தில், மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப்.ஜெனரல் கலோன், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் ராஜேஸ்வர் சிங், முப்படை அதிகாரிகள், பயிற்சி ராணுவ வீரர் என, 10 பேர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஆர்.சி., ராணுவ பேண்ட் குழுவினரின் இசை அணிவகுப்பு நடந்தது.லெப்.

ஜெனரல் கலோன் கூறுகையில்,''ராணுவத்திற்கு பெரிய சவாலாக இருந்த, இந்த போரை, காலாட்படை திறம்பட கையாண்டது. 24வது பிரிவு காலாட்படையினர் இரவு பகலாக போரில் ஈடுபட்டு, வெற்றிக்கு காரணமாகினர். இந்நாளில் மகாராஜா ஹரிசிங், காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்ததாக கையொப்பமிட்டார். நம் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் அரண், இந்தியாவின் முதுகெலும்பு என காலாட்படை அழைக்கப்படுகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X