அவிநாசி: அவிநாசி அடுத்த நடுவச்சேரி ஊராட்சியில், கடந்த, 10 ஆண்டுக்கு முன், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், குட்டை அமைக்கப்பட்டது. குட்டையின் நாற்புறமும் கற்கள் பதிக்கப்பட்டு, சிறப்பான கட்டமைப்புடன் குட்டை அமைக்கப்பட்டது.கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் இக்குட்டையையொட்டி, குடிமராமத்து திட்டத்தின் கீழ், தடுப்பணை கட்டப்பட்டது. அவ்வப்போது பெய்யும் மழையின் போது நீர் வரத்து இருந்தாலும், இக்குட்டைகள் நிரம்பவில்லை.இந்நிலையில், 10 ஆண்டு இடைவெளிக்கு பின், சமீபத்தில் பெய்த கன மழையில், வேலங்காடு குட்டை நிரம்பி வழிகிறது. இதனால், வேலங்காடு, வளையபாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மஞ்சள், குச்சிக்கிழங்கு, சோளம் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.