கோவில் அறங்காவலர் நியமிக்க திட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கோவில் அறங்காவலர் நியமிக்க திட்டம்
Added : அக் 27, 2021 | |
Advertisement
 

திருப்பூர்: கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய, மாவட்ட குழு ஏற்படுத்தப்படுகிறது.மாவட்டக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்க ஹிந்து சமயத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களை இணைத்து, நவ., 18ம் தேதிக்கு முன், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், திருப்பூர், அவிநாசி, தாராபுரம், பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி, காங்கயம், மூலனுார், மடத்துக்குளம் சரக ஆய்வாளர் அலுவலகங்களில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X