ஒரு போன் போதுமே...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
22:51

தேக்கம்... சிரமம்திருப்பூர் மாநகராட்சி 44 வது வார்டு, கரட்டாங்காடு, தடுக்குகாரர் தோட்டம் வீதியில் சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படவில்லை. இதனால், கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மழை நாட்களில் மேலும் சிரமம் அதிகரிக்கிறது.- சரவணன், தடுக்குகாரர் தோட்டம், கரட்டாங்காடு.கலப்பு.. கழிவுநீர்திருப்பூர் மாநகராட்சி 23 வது வார்டு, கருணாகரபுரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. கோல்டன் நகர் செல்லும் ரோட்டில் குழி தோண்டியதால், குழாய் உடைந்து கழிவு நீர் கலக்கிறது. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- கார்த்திக், கருணாகரபுரி.நீச்சல் குளம்... வீண்பழங்கரை ஊராட்சி, யுவராஜ் அவென்யூ பகுதியில் அமைத்த நீச்சல் குளம் பயன்பாடும், பாதுகாப்புமின்றி உள்ளது. மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி மையமாக மாறி விட்டது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.- அவினாசிலிங்கம், பழங்கரை.சேறு, சகதி... அவதிதிருப்பூர் மாநகராட்சி மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர், வடக்கு பகுதியில் உள்ள 7 மற்றும் 8 ஆகிய இரு வீதிகளும் மழை பெய்து சேறும் சகதியுமாக மாறி விட்டது. நடக்கவும் வாகனங்கள் செல்லவும் வழியின்றி அவதி ஏற்பட்டுள்ளது.- ஆனந்தன், எஸ்.ஆர். நகர்.தடை... தடுமாற்றம்திருப்பூர் அவிநாசி ரோடு - பி.என். ரோடுகளை இணைக்கும் குமரானந்தபுரம் ரோட்டில் 'ஸ்மார்ட் ரோடு' அமைத்துள்ளனர். இதில் நான்கு இடங்களில் உயரமாக வேகத்தடை அமைக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது.- -- சாமிநாதன், குமரானந்தபுரம்.குப்பை... கேடுதிருப்பூர் மாநகராட்சி 23வது வார்டு டி.பி.ஏ., காலனி பகுதியில் 3 மாதமாக குப்பை சேகரிப்பு வாகனம் வருவதில்லை. கழிவுகள் வீதியோரங்களில் வீசப்படுகிறது.சுப்ரமணியம், டி.பி.ஏ., காலனி.இருள்... அச்சம்பல்லடம், பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கிட்டாபுரம் ரோடு, ஸ்மார்ட் சிட்டி குடியிருப்பு பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.- சிகப்பி, பணிக்கம்பட்டி.இல்லை... ரோடுவீரபாண்டி பிரிவிலிருந்து நொச்சிபாளையம் செல்லும் ரோட்டில் 52 வது வார்டு, ஏ.பி.,நகர் உள்ளது. இதில் 2 வது வீதியில் தார் ரோடு அமைக்காமல் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது.- ராஜ்குமார், ஏ.பி. நகர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X