அவிநாசி: அவநாசியில், சமீபத்தில் பலத்த மழை பெய்தது: சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது. இதில், கருவலுார், சின்னேரிபாளையம், வளையபாளையம், சாலையூர் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே வாழை மரங்கள் காற்றுக்கு விழுந்தன.வாழைத்தார், அறுவடைக்கு தயாரான நிலையில், வீழ்ந்ததால், பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.வருவாய்த்துறையினர் கூறுகையில், 'மழையில், 1,500 வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது' என்றனர்.