திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, அண்ணா காலனி, ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர், ஜெயந்தி. வீட்டு முன்புறம் வளர்ந்திருந்த, வேப்ப மர வேர், கட்டடத்துக்குள் ஊடுருவி, சுவர் பலவீனமடைந்ததால், நேற்று மரத்தை வெட்டினர்.கிளைகளை மட்டுமின்றி, மரத்தையும் வெட்டியதால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், 15, வேலம்பாளையம் ஆர்.ஐ., சக்திவேல் அப்பகுதிக்கு வந்து, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.ஜெயந்தி குடும்பத்தினரை அழைத்து, 'வீட்டின் உட்பகுதியில் மரம் இருந்தாலும், கட்டடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், வருவாய்த்துறையின் அனுமதி பெற்ற பின்னரே, மரத்தை வெட்ட வேண்டும். இல்லாவிடில், நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரித்தனர்.இதனால், மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும், மரம் முழுவதும் மொட்டையாக காட்சியளிக்கிறது.