திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, பெரியாண்டிபாளையம் பிரிவு, ஆர்.கே., டவரில் 'அப்பேரல் வேலி' ஜவுளி மாளிகை திறப்பு விழா நேற்று நடந்தது.அதன் உரிமையாளர்கள் காளியப்பன், சிந்தன் குடும்பத்தினர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து, ஜவுளி மாளிகையை திறந்து வைத்தனர். உரிமையாளர் குடும்பத்தினர், முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.புத்தம் புதிய டிசைன்களுடன், தீபாவளியை எங்களுடன் கொண்டாடி மகிழலாம் என, அப்பேரல் வேலி' நிர்வாகிகள் அன்புடன் அழைத்துள்ளனர்.''பெண்கள் பெருமிதம் கொள்ளும் வகையிலான அனைத்து விதமான பேன்ஸி சேலை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆடவருக்கான வசீகரிக்கும் கச்சிதமான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான பட்டர்பிளை கலெக் ஷன்ஸ், 'டிரெண்டிங்' கலெக் ஷன்ஸ் என, குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே இடத்தில், குதுாகலமான புத்தாடை எடுத்து, தீபாவளியை கொண்டாடி மகிழலாம்'' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.