திருப்பூர்: நவ., 1ம் தேதி முதல், ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவ, மாணவியருக்க இலவச பாடபுத்தகம், சீருடை, புத்தகப்பை, காலணி வினியோகம் துவங்கியது.திருப்பூர் மாவட்டத்துக்கு வந்த பாட புத்தகங்கள் உட்பட பொருட்கள் இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து அனைத்து தொடக்க உயர்நிலைப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.சமூக இடைவெளி கருதி சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கான, பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடை, புத்தகப்பை, காலணி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் நேரடி வகுப்பில் படிக்கும் உற்சாகத்தில் மாணவர்கள் புத்தங்களை வாங்கி செல்கின்றனர்.நிதியை வீணடிக்க கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, இருப்பில் இருந்த முன்னாள் முதல்வர் படங்கள் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.