திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மொத்தம், 99 இடங்களில், 25 ஆயிரத்து, 570 கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவர் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.மாநகராட்சி பகுதிகள்அண்ணா நெசவாளர் காலனி, குருவாயூரப்பன் நகர், கோவில்வழி, புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர் காலனி, பெரியாண்டிபாளையம், சூசையாபுரம், சுண்டமேடு, மண்ணரை, டி.எஸ்.கே., காலனி, தென்னம்பாளையம், வீரபாண்டி, 15 வேலம்பாளையம், நல்லுார் உள்ளிட்ட, 17 நகர்நல மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.திருப்பூர்: பெருமாநல்லுார், மங்கலம், முதலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.அவிநாசி வட்டாரம்: சேவூர், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரம்பாளையம், ஆலத்துார், பேரநாயக்கன்புதுார், ஸ்ரீனிவாசபுரம், துலுக்கமுத்துார், குப்பாண்டம்பாளையம், வடுகபாளையம், பாப்பநாயக்கன்பாளையம், போத்தம்பாளையம்.சாவக்காட்டுப்பாளையம், நம்பியாம்பாளையம், கருவலுார், உப்பிலிபாளையம், தெக்கலுார், புதுப்பாளையம், சின்னக்கானுார், முத்துசெட்டிபாளையம், ராயம்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், பெரியாயிபாளையம், ராக்கியாபாளையம், பெரியகருணைபாளையம், பெரியாயிபாளையம் ஆகிய, 25 அரசு பள்ளிகள்.பல்லடம்: செம்மிபாளையம், பூமலுார், புளியம்பட்டி, அல்லாளாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கலைக்கல்லுாரி, பல்லடம்.பொங்கலுார்: வடுகபாளையம், கொடுவாய், பொங்கலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.வெள்ளகோவில்: வெள்ள கோவில், முத்துார், கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.இவற்றுடன் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 300 தடுப்பூசி, ஒன்பது தாலுகா மருத்துவமனையில் தலா, 100 வீதம் 900 தடுப்பூசியும் இன்று செலுத்தப்படுகிறது.