திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நான்கு நாட்களாக கொரோனா இறப்பு இல்லாத நிலையில், நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு மூவர் பலியாகினர்.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 86 வயதுடைய ஆண், மதுரை, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 57 வயது பெண், திருப்பூர் மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெற்று வந்த, 85 வயதுடைய ஆண் என மூவர் நேற்று தொற்றுக்கு பலியாகினர்.இம்மாதம், 23ம் தேதிக்கு பின் நான்கு நாட்களாக கொரோனா மரணம் இல்லாத நிலையில் நேற்று ஒரே நாளில், ஒரு பெண் உட்பட, மூவர் பலியாகினர்.நேற்று புதிதாக, 70 பேருக்கு தொற்று உறுதியானது; 97 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். 974 ஆக இருந்த இறப்பு மூவர் பலியால், 977 ஆக உயர்ந்தது. நேற்று நிலவரப்படி மாவட்டத்தை சேர்ந்த, 724 பேர் பல்வேறு பகுதியில் சிகிச்சையில் உள்ளனர்.