தொற்றுக்கு மூவர் பலி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தொற்றுக்கு மூவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
23:06

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நான்கு நாட்களாக கொரோனா இறப்பு இல்லாத நிலையில், நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு மூவர் பலியாகினர்.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 86 வயதுடைய ஆண், மதுரை, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 57 வயது பெண், திருப்பூர் மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெற்று வந்த, 85 வயதுடைய ஆண் என மூவர் நேற்று தொற்றுக்கு பலியாகினர்.

இம்மாதம், 23ம் தேதிக்கு பின் நான்கு நாட்களாக கொரோனா மரணம் இல்லாத நிலையில் நேற்று ஒரே நாளில், ஒரு பெண் உட்பட, மூவர் பலியாகினர்.நேற்று புதிதாக, 70 பேருக்கு தொற்று உறுதியானது; 97 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். 974 ஆக இருந்த இறப்பு மூவர் பலியால், 977 ஆக உயர்ந்தது. நேற்று நிலவரப்படி மாவட்டத்தை சேர்ந்த, 724 பேர் பல்வேறு பகுதியில் சிகிச்சையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X