பெரியாறு அணைக்கு வந்த இடுக்கி எம்.பி.,க்கு எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
23:14

கூடலுார்: முல்லை பெரியாறு அணைக்கு செல்ல முயன்ற இடுக்கி காங்., - எம்.பி., டீன் குரிய கோஸ்-க்கு, தமிழக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கேரளாவில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, தமிழக அரசு வசம் உள்ளது.சில நாட்களாக, பெரியாறு அணை நீர்பிடிப்பில் கனமழை பெய்து நீர்மட்டம் 137.6 அடியை எட்டியுள்ளது. இதனால், வழக்கம்போல் கேரள அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அணை தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை கிளப்பி பூதாகரமாக்கி வருகின்றனர்.

இதுபோன்ற பிரச்னைக்குரிய நேரத்தில், அணைப் பகுதிக்கு இரு மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் தவிர, மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ செல்ல வேண்டும் என்றால், முறையான அனுமதியை பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.நேற்று முன்தினம் மாலை, இடுக்கி காங்., -எம்.பி., டீன் குரியகோஸ் வல்லக்கடவு வழியாக அணைப் பகுதிக்கு சென்றார். ஜீப்பில் வந்தஎம்.பி.,யால் ஷட்டர்களுக்கு முன், 137 அடிக்கு மேல் தேங்கியிருந்த தண்ணீரில் கடந்து செல்ல முடியவில்லை.

மேலும், பாதுகாப்பில் இருந்த கேரளா போலீசார், தாங்கள் அணைப் பகுதிக்கு செல்வதால் பிரச்னை பெரிதாகி விடும் என கூறி, திருப்பி அனுப்பி விட்டனர்.ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:இடுக்கி தொகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரியாறு அணைக்கு எதிராக பேச மாட்டேன் என வாக்குறுதி அளித்ததால், தமிழர்கள் அவருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்தனர்.ஆனால், இதை மறந்து எம்.பி., அணைப் பகுதிக்கு செல்ல முயன்றது ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது அணை அருகே புதிய அணை என்ற கோரிக்கையை கேரள அரசு கையில் எடுத்துள்ள நிலையில், புதிய அணை கட்டுவதற்கான இடத்தை எம்.பி., பார்வையிடச் சென்றாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X