40 சதவீதம் போனஸ் கேட்டு டாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
40 சதவீதம் போனஸ் கேட்டு டாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்
Added : அக் 27, 2021 | |
Advertisement
 

ராமநாதபுரம் : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சி.ஐ.டி.யு., ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நம்புராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் தனபால், பாபுகுமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ், மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி கோரிக்கையை விளக்கி பேசினார்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி நிறைவுரையாற்றினார்.

ரத்தினக்குமார் நன்றி கூறினார். 40 சதவீத போனஸ் வழங்கவும், தொழிலாளர்களை அழைத்து பேசவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.---

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X