அன்னுார்: வேலை தராததை கண்டித்து, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொன்னேகவுண்டன்புதுாரில், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், பொன்னேகவுண்டன்புதுார், மூலகுரும்பபாளையம், செந்தாம்பாளையம் ஆகிய மூன்று ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை.
இதை கண்டித்தும், ஆண்டுக்கு, 200 நாட்கள் வேலை தர வலியுறுத்தியும், தினசரி சம்பளத்தை, 600 ரூபாயாக உயர்த்தி தரக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் முகம்மது முசீர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், அர்ஜுன் உட்பட பலர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.