மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதுார் ஊராட்சியில், ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, தண்டிபெருமாள்புரம், கணுவாய்பாளையம் வரை, 3 கி.மீ., துாரத்துக்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில், 2.15 கோடி ரூபாயில் சாலை போடப்பட்டது. இந்த சாலை தரமாக போடப்பட்டுள்ளதா என, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு, சாலையில் ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளதாக என, சதுரமாக குழி தோண்டி, அதை அளந்து பார்த்தார். பின்பு அரசு ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டதை விட, கூடுதலான அளவில் தார் போடப்பட்டுள்ளது எனவும் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.