சூலூர்: சூலுார் தாலுகாவுக்கு உட்பட்ட வாகராயம்பாளையத்தில், மோப்பிரிபாளையம் மற்றும் பதுவம்பள்ளி கிராமத்துக்கு உட்பட்ட மக்களின் நிலம் தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடந்தது.
டாஸ்மாக் மேலாளரும், சூலூர் தாலுகாவின் கண்காணிப்பு அதிகாரியுமான பாபு தலைமையில் நடந்த முகாமில், 92 மனுக்கள் பெறப்பட்டன. ஆறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. சூலுார் தாசில்தார் சகுந்தலாமணி, மண்டல துணை தாசில்தார் பாண்டியன் மற்றும் ஆர்.ஐ., மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
கள ஆய்வு செய்யப்படும்பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பங்கேற்போர், பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை மாற்றம், உட்பிரிவு எண் மாறுபாடு, பரப்பு மற்றும் பெயர் விபரங்கள் ஒரு பட்டாதாரருக்கும், பக்கத்து பட்டாதாரருக்கும் இடையே மாறுபடுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்படும். பரப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு கள ஆய்வு செய்து மட்டுமே தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் கூறினர்.