கோவிட் தடுப்பூசி: வீடு வீடாகச் சென்று டோக்கன் பட்டுவாடா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
23:42



கோவை: கோவையில், கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் இன்னும், 2 லட்சம் பேர் செலுத்த வேண்டியிருக்கிறது. வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுக்கும் வேலையில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று முதல் அலையின்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம்; உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்ச உணர்வு ஏற்பட்டது. கொரோனா தாக்கம் அதிகரிக்கத் துவங்கி, உயிர் பலி ஏற்படத் துவங்கியதும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர்.

ரண்டாவது அலை பரவியபோது, தொற்றின் தாக்கம் உச்சத்துக்குச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிர் பலி அதிகரித்தது.ஒவ்வொரு குடும்பத்தினரும் ஏதோ ஒரு வகையில் இழப்புகளை சந்தித்ததும், தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். அப்போது, தடுப்பூசி போடுவதற்கு முகாம்களில் முட்டி மோதினர்.நள்ளிரவு நேரங்களில் வரிசையில் காத்திருந்தனர். கிராமங்களில் பல கி.மீ., துாரத்துக்கு மக்கள் காத்திருந்த அவலமும் இருந்தது. டோக்கன்களை கட்சியினர் அபகரித்த சம்பவங்களும் நடந்தன.தேவை அதிகமாக இருக்கிறது; தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால், பிரச்னை எழுகிறது என, சுகாதாரப் பிரிவினர் கூறி வந்தனர்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது!தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. 90 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். ஆனால், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியிருக்கின்றனர்.

மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் இன்னும், 2 லட்சம் மக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியிருக்கிறது.முதல் டோஸ் செலுத்தியவர்கள், 84 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மருந்து வீரியம் இருக்காது; தொற்று பாதிப்பு ஏற்படக் கூடும். மீண்டும் மூன்றாவது அலையாக விஸ்வரூபம் எடுத்து விடக் கூடாது என்பதற்காக, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் மெனக்கெடுகின்றனர்.வீடு வீடாகச் சென்று, காய்ச்சல் அறிகுறி இெலுத்த வேண்டியவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.வரும் சனிக்கிழமை காலை, 7:00 முதல் மாலை, 7:00 மணி வரை, மீண்டும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அதற்குள் ஒவ்வொரு பணியாளரும், 300 பேருக்கு டோக்கன் வழங்க வேண்டும்.மொத்தமுள்ள, 500 பணியாளர்கள், 1.5 லட்சம் பேருக்கு வழங்கியிருக்க வேண்டுமென, கமிஷனர் ராஜகோபால் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, ஒவ்வொரு ஊழியரும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்குகின்றனர். நேற்று ஒரே நாளில், 21 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்பணி, சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்குவதால், அலட்சியம் காட்டாமல், இரண்டாவது டோஸ் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உயிர் காக்கும் மருந்து என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.முதல் டோஸ் செலுத்தியவர்கள், 84 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மருந்து வீரியம் இருக்காது; தொற்று பாதிப்பு ஏற்படக் கூடும். மீண்டும் மூன்றாவது அலையாக விஸ்வரூபம் எடுத்து விடக் கூடாது என்பதற்காக, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் மெனக்கெடுகின்றனர்.

'மாஸ்க்' போடலேன்னா 'ரிஸ்க்'பண்டிகை கொண்டாட்டத்துக்கு பொருட்கள் வாங்க, மக்கள் அலை அலையாக மார்க்கெட் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நோக்கி வருகின்றனர். சமூக இடைவெளி அறவே இல்லாத சூழல் காணப்படுகிறது.முகக்கவசம் அணிவதை பலரும் தவிர்க்கின்றனர். பலரும் தாடையில் அணிந்திருக்கின்றனர். தற்போது தொற்று பரவல் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X