ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் இரவு துறைமுகம் போலீசார் வேர்க்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த காரை சோதனை செய்தனர்.காரில் பதுக்கி இருந்த 428 மது பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த ராமேஸ்வரம் மார்க்கெட் தெரு ரியாஸ்கான், எம்.ஆர்.டி., நகர் நேதாஜி, வழிவிட்டான், பாம்பன் மலைச்சாமி, ரவிச்சந்திரன், ராமநாதபுரம் வழுதுார், வாலாந்தரவை சேர்ந்த கணேசன், சந்திரன், ரஞ்சித் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.