காரியாபட்டியில் கனமழை; வீடுகளை சூழ்ந்த மழை நீர் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
காரியாபட்டியில் கனமழை; வீடுகளை சூழ்ந்த மழை நீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2021
23:56

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் பெய்த கனமழைக்கு நரிக்குறவர் குடியிருப்புகளை மழை நீர் சூழந்ததால் ,குடியிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.



காரியாபட்டி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. நீர்நிலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில் இரண்டு மணி நேரமாக பெய்த மழையால் நீர்வரத்து ஓடைகளில் அளவுக்கு அதிகமாக மழை நீர் ஓடியது. ஊரணிகள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. பனிக்கனேந்தல் பகுதி ஊரணி நிரம்பி மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதில் நரிக்குறவர் குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கியது.



அவர்கள் பத்திரமாக மீட்கபட்டு மந்திரி ஓடை அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழையால் நீர்நிலைகள் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கல்யாணகுமார், தாசில்தார் தனக்குமார், பி.டி.ஓ.,கள் ராஜசேகரன், சிவகுமார், துணை பி.டி.ஓ., புவனேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர் கண்ணன், எஸ்.ஐ., அசோக் குமார் மழை நீர் வடிய போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதி வரத்துக் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரினர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X