ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 5 கோடி மோசடி கள்ளக்குறிச்சியில் 9 பேர் அதிரடி கைது | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 5 கோடி மோசடி கள்ளக்குறிச்சியில் 9 பேர் அதிரடி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:04

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, கோடிக் கணக்கில் மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் ஆன்லைன் மூலம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., ராஜலட்சுமி தலைமையில், கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு, கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் 'ஒன் எக்ஸ் பெட் ஆப்' சூதாட்ட பந்தயம் நடந்தது தெரியவந்தது.விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த க.செல்லம்பட்டைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன், 27; ஓமலுார் சாமிநாயக்கன்பட்டி கோவிந்தராஜ் மகன் சந்திரசேகர், 27; மண்மலை அருணாச்சலம் மகன் கிருஷ்ணமூர்த்தி, 27; சின்னசேலம் காந்திநகர் ராதாகிருஷ்ணன் மகன் கோகுல்நாத், 24; ரங்கசாமி மகன் அருண்குமார், 24; ராஜா மகன் மணிகண்டன், 24; சங்கராபுரம் பாவளம் கொளஞ்சி மகன் மணிவேல், 27; ஈசாந்தை கருணாநிதி மகன் அரவிந்த், 24; கரடிசித்துார் ரவி மகன் பாலாஜி, 23; ஆகிய 9 பேர் என்பது தெரிந்தது.இதில், மணிகண்டன் ஆன் லைன் கேமில் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். இவர்களிடம் விளையாடி ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர். இந்த சூதாட்டம் மூலம் மணிகண்டன் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் மனைகள் வாங்கியும் தொழிலில் முதலீடு செய்திருப்பதும், மற்ற 8 பேருக்கும் சம்பாதிக்கும் பணத்தில் பங்கு அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.அவர்களிடமிருந்து 30 மொபைல்போன்கள், 400 சிம்கார்டுகள், ஒரு ராயல் என்பீல்டு பைக், ஒரு எர்டிகா கார், 20 லட்சம் ரூபாய், ஒரு 'டிவி', 5 மோடம், ஒரு வைபை மற்றும் விரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவி, 9 யூ.பி.எஸ்., 6 மானிட்டர், 9 சி.பி.யூ., உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். பிடிபட்ட 9 பேரையும் கைது செய்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக், கைது செய்யப்பட்ட நபர்கள் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., எச்சரித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X