திறப்பு: புதுச்சேரியில் நவ., 8ம் தேதி பள்ளிகள்...அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:07

கொரோனா பெருந்தொற்று காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சில மாதங்கள் வகுப்புகள் நடத்தப்பட்டது.



பின்னர் கொரோனா அதிகரிப்பால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவ. 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அறிவித்தார்.



இதுகுறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கொரோனா பரவலை தடுத்திட பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த செப்., 1ம் தேதியில் இருந்து, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அனைத்து பள்ளிகளும் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் திறக்கப்படும். அவ்வப்போது அரசு வெளியிடும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது.சுழற்சி முறையில் வகுப்புஅனைத்து பள்ளிகளும் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில், அரை நாள் மட்டும் வகுப்புகள் நடைபெறும்.2, 4, 6 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் அரை நாள் வகுப்புகள் நடைபெறும்.வருகைப் பதிவேடு கிடையாதுவகுப்புகள் காலை அரை நாள் மட்டும் நடைபெறும் என்பதால், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட மாட்டாது. பெற்றோர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பலாம்.வருகைப்பதிவேடு கட்டாயமில்லை. பள்ளிக்கு வராத மாணவர்களின் நலன் கருதி 'ஆன்லைனில்' பாடம் நடத்த கல்வித் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஏற்கனவே புத்தகம் வழங்கப்பட்டு விட்டது. சீருடை உள்ளிட்ட பொருட்கள் விரைவில் வழங்கப்படும்.



நர்சரி வகுப்பு கிடையாதுபொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முழுமையாக வகுப்புகள் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது.அதேபோன்று சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கும் முழு நேர வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் திறக்கப்பட மாட்டாது. அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து கவர்னர் மற்றும் முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.புகார் கொடுத்தால் நடவடிக்கைகடந்தாண்டு வசூலித்த கல்விக் கட்டணமே இந்தாண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயாராக உள்ளது. பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க போலீஸ் துறையும், கல்வி துறையும் இணைந்து செயல்படும்.பள்ளிகள் திறப்பதற்கு முன், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.தனி கல்வி வாரியம்புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.



அதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனி கல்வி வாரியம் அமைப்பதே அரசின் நோக்கம். இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவேன்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் பதிவாளர் உள்ளிட்ட 28 பணியிடங்களை நிரப்பவும், பல்கலையில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாநிலத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன்.தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.விரைவில் போலீஸ் தேர்வுமாநிலத்தில் அதிகரித்து வரும் கொலை உள்ளிட்ட குற்றங்களையும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டி.ஜி.பி.,யுடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கையை தீவிரப்படுத்தப்படும்.



அதேபோன்று, போலீஸ் பணிக்கான தேர்வு நடத்திட தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதனால், போலீஸ் பணிக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளிவரும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.பேட்டியின்போது கல்வித் துறை செயலர் அசோக்குமார், இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X