ஈரோடு நிறுவனத்தில் வருமான வரி சோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:07

ஈரோடு:ஈரோடு எஸ்.கே.எம்., நிறுவனத்துக்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், வீடுகள் என, 11 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.



ஈரோடை தலைமையிடமாக கொண்டு, எஸ்.கே.எம்., என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. கால்நடை தீவன உற்பத்தி, முட்டை ஏற்றுமதி, சித்த மருத்துவமனை, சித்த மருந்து உற்பத்தி ஆலை மற்றும் பூர்ணா என்ற பெயரில் தவிடு எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களை நடத்தி வருகிறது.



இவை, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஆண்டுதோறும் வர்த்தகம் நடக்கிறது. நிறுவனங்களின் தலைவராக எஸ்.கே.மயிலானந்தன், நிர்வாக இயக்குனர்களாக அவரது மகன்கள் ஸ்ரீசிவ்குமார், சந்திரசேகர் உள்ளனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக இந்நிறுவனம் மீது புகார் எழுந்தது.



இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.ஈரோடு, சோளாங்க பாளையத்தில் உள்ள முட்டை ஏற்றுமதி நிறுவனம், நன்செய் ஊத்துக்குளியில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி ஆலை, எண்ணெய் நிறுவனம், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சித்த மருந்தகம், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சித்த மருத்துவமனை.பெரியார் நகரில் உள்ள மயிலானந்தன் வீடு, அவரது மகன்கள் வீடு, அவர்களுக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்கள் என, மொத்தம் 11 இடங்களில் சோதனை நடந்தது.



சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட குழுக்களாக, 70க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நிறுவனத்தில் உள்ள ஆவணங்கள், வரவு - செலவு கணக்கு, ஆடிட்டர்கள் வருமான வரித் துறையில் சமர்ப்பித்த கணக்குகளை மேற்கோள் காட்டி சோதனை நடந்தது.ரயில்வே துறை மூலம் மேற்கொண்ட வர்த்தகம் குறித்தும், வருமான வரித் துறையினர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.கே.மயிலானந்தன், வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்றத்தின் தலைவராகவும் உள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X