குவியும் குப்பைக்கு தீர்வு இல்லை; ஏக்கத்தில் வடக்கு தேவதானம் பொதுமக்கள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
குவியும் குப்பைக்கு தீர்வு இல்லை; ஏக்கத்தில் வடக்கு தேவதானம் பொதுமக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:10


ராஜபாளையம் : --குவியும் குப்பைக்கு தீர்வு இல்லை, தேரோடும் வீதியில் திறந்தவெளி கழிப்பிடம், பஸ் நிறுத்தம் இன்றி அவதி, கழிவுநீர் வெளியேற பிரச்னை என தீர்வுகளை எதிர்பார்த்து வடக்கு தேவதானம் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.



ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேத்துார் அடுத்து வடக்கு தேவதானம் ஊராட்சி உள்ளது. பழமை வாய்ந்த நச்சாடை தவிர்த்தருளிய நாதன் சுவாமி கோயில் அமைந்துள்ள இப்பகுதியிலும்,மெயின் ரோடு அருகே உள்ள குமரன் கோயில் தேர் வீதியிலும் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக உபயோகிப்பதால் சுகாதாரப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.



குப்பையை தனியாக பிரிக்க ஒதுக்கப் பட்ட பகுதி செயல் பாடின்றி பிளாஸ்டிக் கழிவுகளால் தேங்கி உள்ளது. அருகில் உள்ள மண்புழு உரக் கூடமும் காட்சிப் பொருளாகி விட்டது.ஊராட்சியில் ஆங்காங்கே திறந்தவெளி பாராக குடிமகன்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். மெயின் ரோட்டில் பயணிகள் ஒதுங்க நிழல் குடை வசதி கூட இல்லை.



சாக்கடைகள் முறையாக தூர்வாரப்படாமல் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி கொசு பிரச்னை அதிகரிக்கிறது. ஏற்கனவே இருந்த ரோடுகள் மேல் அமைக்கப்பட்ட புதிய ரோடுகளால் குடியிருப்புகள் பள்ளத்திற்குள் சென்றுவிட்டது.பல இடங்களில் செப்பனிடப்படாத ரோடுகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X