நகராட்சி தேர்தலில் ஓட்டுச்சாவடி குறைக்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:11

சிவகங்கை:நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிகளில் எண்ணிக்கையை குறைத்து 1200 ஓட்டுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் ஏற்படுத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..



நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் உள்ள 156 நகராட்சிகளின் வார்டு உறுப்பினர், தலைவர், துணை தலைவர் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நவ.,1 ல் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த கலெக்டர்கள் வெளியிடுகின்றனர்.



நடந்து முடிந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் 1000 ஓட்டுக்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் ஏற்படுத்தினர். ஆனால் நகராட்சி தேர்தலில் மண்டல அதிகாரிகள் தேர்தலன்று ஓட்டு பெட்டிகளை எடுத்து வருவதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க 1200 ஓட்டுக்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என ஏற்படுத்தி, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நேரடி கமிஷனர் நியமனம்





தமிழகத்தில் உள்ள 156 நகராட்சிகளில் 10 நகராட்சிகளில் மட்டுமே கமிஷனர்கள் உள்ளனர். மற்ற அனைத்து நகராட்சிகளிலும் மேலாளர், இன்ஜி., களே கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். தேர்தல் அலுவலராக நேரடி நியமனம் பெற்ற கமிஷனரே இருக்க வேண்டும் என்பதால் விரைவில் காலியிடங்களுக்கு கமிஷனர் நியமிக்கப்படுவர்.பேரூராட்சியில் இருந்து தரம் உயர்த்திய நகராட்சிகளுக்கும் ஏற்கனவே உள்ள வார்டு வரையறை படி தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X