சிறையில் கைதிகளுக்கு உதவினால் பணி நீக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:17

புதுச்சேரி-''புதுச்சேரியில் 32 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது'' என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரி வாணரப்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் ரவுடி உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர். காரைக்காலில் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி, கூலிப்படையால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதுதவிர, பணி முடித்து திரும்பிய ஆசிரியையிடம் செயின் பறிக்க முயற்சி, கஞ்சா விற்பனை என குற்ற சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளது.இதைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி.,க்கள் லோகேஷ்வரன், ராகுல்அல்வால், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.ரவுடியிசம் மற்றும் கஞ்சா தடுப்பு பிரிவுக்கு ஒரே எஸ்.பி., நியமிக்கப்பட்டு இருந்தார். சட்டம் ஒழுங்கு ஆலோசனையில், ரவுடியிசத்தை ஒழிக்கவும், கஞ்சா தடுப்பு நடவடிக்கைக்கு தனித்தனி எஸ்.பி.,க்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்திற்கு பிறகு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது;சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக அரசின் எண்ணங்களை, காவல் துறையிடம் தெரிவித்துள்ளோம். அதன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். சுற்றுலா தலமாக புதுச்சேரி திகழ்வதால், ஏராளமான மக்கள் வருகின்றனர். அதனால், போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாற கூறியுள்ளோம்.புதுச்சேரியில் 32 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் வர வேண்டி உள்ளது.மேலும், புதிதாக கடுமையான சட்டங்கள் கொண்டுவர ஆராய்ந்து வருகிறோம். அதற்கான சட்டங்களை நிறைவேற்றி, மத்திய உள்துறை அனுமதி பெற வேண்டும்.சிறையில் கைதிகளுக்கு அதிகாரிகள் யாரேனும் உதவினால், உடனடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளோம். இது தொடர்பாக, விசாரணை நடத்தி டி.ஜி.பி., நடவடிக்கை எடுப்பார்.புதுச்சேரி மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதன் அடிப்படையில் போலீஸ் செயல்படுகிறது. குற்றவாளிகளுக்கு இடையே உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக குற்றச் சம்பவங்கள் நடக்கிறது. அந்த குற்றச் சம்பவங்கள் கூட நடக்கக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X