தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆறுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:25

கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் பட்டாசு குடோன் தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பட்டாசு குடோனில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் இறந்தனர். மேலும், படுகாயமடைந்த 11 பேரில் 6 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், 5 பேர் சென்னை மற்றும் சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். அதனை உயர்த்தி 10 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும்.விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மேல்சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளதால், அவர்களுக்கும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இதுபோன்ற துயர சம்பவம் இனி வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம், பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம், வழக்கறிஞர் செல்வநாயகம், பொதுச் செயலாளர் ராஜேஷ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ஜெயதுரை உடனிருந்தனர். தி.மு.க., எம்.பி.,கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, படுகாயமடைந்த 6 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து சங்கராபுரம் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு, இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அரசு பெண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி உட்பட பலர் உடனிருந்தனர். அ.தி.மு.க.,கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் 6 பேரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தலா 5,000 ரூபாய் வழங்கினார்.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர், வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன் உடனிருந்தனர்.தே.மு.தி.க.,விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும், சங்கராபுரம் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட செயலாளர் கருணாகரன், அவை தலைவர் கோவிமுருகன், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, அருணாசலம் உட்பட பலர் உடனிருந்தனர். அதேபோல், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் விக்கிரமராஜா, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் ராஜசேகர், மண்டல தலைவர் சண்முகம் இணை செயலாளர் ஸ்ரீதர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X