'ஆன்லைன்' சூதாட்டம் நடத்திய ஒன்பது பேர் கும்பல் கைது | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
'ஆன்லைன்' சூதாட்டம் நடத்திய ஒன்பது பேர் கும்பல் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 அக்
2021
01:26

கள்ளக்குறிச்சி:'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தி, கோடிக் கணக்கில் மோசடி செய்த ஒன்பது பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.



கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் ஆன்லைன் மூலம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., ராஜலட்சுமி தலைமையில், கள்ளக்குறிச்சி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு, கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில், 'ஒன் எக்ஸ் பெட் ஆப்' என்ற பெயரில் சூதாட்ட பந்தயம் நடந்தது தெரியவந்தது.



இதை நடத்திய மணிகண்டன், 27, என்பவர் உட்பட ஒன்பது வாலிபர்களை கைது செய்தனர். இதில், மணிகண்டன், ஆன்லைன் கேமில் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். இவர்களிடம் விளையாடி ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.இந்த சூதாட்டம் மூலம் மணிகண்டன் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துள்ளார்.



அதுமட்டுமின்றி, பல்வேறு இடங்களில் மனைகள் வாங்கியும், தொழிலில் முதலீடு செய்திருப்பதும், மற்ற எட்டு பேருக்கும் சம்பாதிக்கும் பணத்தில் பங்கு அளித்துள்ளதும் தெரியவந்தது.அவர்களிடம் இருந்து 30 மொபைல் போன்கள், 400 சிம் கார்டுகள், ஒரு ராயல் என்பீல்டு பைக், ஒரு எர்டிகா கார், 20 லட்சம் ரூபாய் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்களை கைப்பற்றினர். ஒன்பது பேரையும், சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்



கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக், கைது செய்யப்பட்ட நபர்கள் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X